பாரதி கலை மன்றம் என்பது ஹூஸ்டனில் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு திரு. சாம் கண்ணப்பன் அவர்களால் துவங்கப்பட்ட இந்த அமைப்பு. இந்தியாவின் தமிழ் பேசும் மக்களை ஒருங்கிணைத்து கலை,இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக தொடர்புகளை ஏற்படுத்தும் ஒரு பாலமாக இன்றும் தலைசிறந்து விளங்குகிறது. இந்த அமைப்பு, அனைவரிடமும் இந்தியாவின் கலாச்சாரம், நிறம், மதம், இனம், மதம், பாலினம் அல்லது தேசிய வம்சம் ஆகியவற்றிக்கு அப்பாற்பட்டு நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் உருவாக்கி வருகிறது. reconciliation and understanding beyond India’s culture, color, religion, ethnicity, religion, gender or national origin.
கடந்த நான்கு சகாப்தங்களாக இந்த மன்றமானது பல கலாச்சார நிகழ்வுகளை இந்தியா வாழ்தமிழர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு திறன்களை ஊக்குவிக்க , நன்கு அறியப்பட்ட கலைஞர்களால் பாரம்பரிய இசை மற்றும் கருவிகள, திரைப்படம் / மெல்லிசை , நடனம், நாடகம் மற்றும் தெருக்கூத்து போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை சிறப்புற நடத்திவருகிறது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க வாழ் சமூகத்தில் குழந்தைகளுக்கு பியர்லேண்ட், சுகர்லேண்ட் சைப்ரஸ், கேட்டி, மற்றும் ஹூஸ்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் அனைவருக்கும் பாரதிமன்ற கிளைகள் மூலம் தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தும் பணியையும் தொடர்ந்து செய்துவருகிறது. ஹூஸ்டன் நகரில் பாரதி கலை மன்றமானது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை செம்மையான முறையில் சிறப்புற செய்து வருவது அனைவரும் அறிந்ததே.